
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர், தனது மனைவி சகாய ஷீபா கோபித்துக் கொண்டு கடந்த வாரம் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், செவ்வாயன்று அவளை சமாதானம் செய்ய மயிலாடிக்கு வந்தார். அப்போது மாமனார் ஞானசேகர், வீட்டின் மொட்டை மாடியில் நின்று சிபினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஞானசேகர் பிளாக் கல்லை தூக்கி வீசியதில் அது நேராக சிபினின் தலையில் பட்டு கடுமையான காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, சிபினின் உயிரிழப்புக்கு காரணமான மாமனார் ஞானசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.