
உத்தரப்பிரதேச மாநிலம் பன்சங்கலி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தொழிலதிபர் சகீல், திருமணமாகி 6 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் தனது 17 வயது மகனுக்கு திருமணத்திற்காக பெண் தேடிவந்த அவர், பக்கத்து ஊரில் உள்ள இளம்பெண் ஒருவரை வரனாக பேசி, பெரியவர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தார்.
ஆனால் அதன்பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. சகீல், தனது மகனுக்காக நிச்சயம் செய்த அந்த இளம்பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி உரையாடி வந்ததாகவும், வீடியோ அழைப்புகளிலும் இருவருக்குள் நெருக்கம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு பிறகு தந்தையின் செல்போனை பார்த்த மகனுக்கு, தன்னை வரனாக ஏற்படுத்திய பெண்ணுடன் தனது தந்தையே உரையாடி வருவது தெரியவந்ததும், அதிர்ச்சியடைந்த மகன், அந்த திருமணத்தைத் வேண்டாமென தெரிவித்துள்ளார். இது இரு குடும்பங்களுக்கு இடையே பெரும் மனவருத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் சகீல், தனது மகனுக்காக நிச்சயித்திருந்த அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சகீலின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிராக சகீலின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.