அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாற்றுத் திறனாளி ஆசிரியர் கைது

Differently-abled teacher arrested for sexually harassing female students in a government school.


கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், செல்வம் என்ற மாற்றுத் திறனாளி தற்காலிக ஆசிரியர் பணியாற்றி வந்தார். சமீபத்தில், அந்தப் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள், தலைமையாசிரியரிடம் செல்வம் தமக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர்.

மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தினார். அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.