
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் சொந்த ஊரான தாராபுரம் பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார். இன்று மதியம், தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் அவரை சுற்ற வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. முக்கியமான சட்டத்துறையினருள் ஒருவராக இருந்த முருகானந்தம், குறிப்பிட்ட காரணங்களால் முன் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா? அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்படும் பணியும் நடைபெற்று வருகிறது. முருகானந்தம் தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள், வழக்கு விவகாரங்கள் உள்ளிட்ட பக்கங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர கொலை, சட்டத் துறையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.