
நண்பன் வாங்கிய கடனுக்காக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த 33 வயதுடைய ஜான் தேவராஜ் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த நரசிம்மன் நகரில் வசித்து வந்துள்ளார்
அவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்
இந்த நிலையில் தனது நண்பர் ஒருவர் வாங்கிய கடனுக்காக ஜான் தேவராஜ் சாட்சி கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு இருக்கையில் கடன் வாங்கிய நண்பன் தீடிரென உயிரிழந்துவிட்டதால், அந்த கடனை ஜான் தேவராஜே அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கடன் வழங்கியவர்கள் ஒவ்வொரு மாதமும் ஜான் தேவராஜ் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை அறவிட்டு வந்துள்ளனர்
இதனால் பெரும் நிதிச் சுமையில் சிக்கிய அவர், இந்த கடனை சமாளிப்பதற்காக வேறு நபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, கடன் கொடுத்தவர்கள் அவரை தொடர்ந்து கடுமையாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கடன் பிரச்சனையால் கணவன் மனைவிக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளன
இதனால் மனவேதனையில் இருந்தத ஜான் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெளியில் இருந்த தனது மனைவி சுப்புலட்சுமிக்கு வீடியோ காலில் அழைப்பை மேற்கொண்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய அவர், வீடியோ காலில் பேசியபடியே தூக்கில் தொங்கியுள்ளார்.
மனைவி சுப்புலட்சுமி இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனே வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவரது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வீடியோ காலில் பேசியபடியே ஜான் தேவராஜ் துக்கிட்டு கொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், ஜான் தேவராஜுக்கு கடன் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டியுள்ளார்களா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.