காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டி படுகொலை – சேலத்தில் பரபரப்பு

Scene near police station in Salem where a rowdy was hacked to death, causing public tension.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற அப்பு பல கொலை வழக்குகளில் தொடர்புடையவராக இருந்தார். ஒருகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று காலை கையெழுத்திட வந்த அவர் அருகிலுள்ள ஹோட்டலில் உணவருந்தி கொண்ருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், ஹோட்டலுக்குள் புகுந்து மதன்குமாரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அஸ்தம்பட்டி காவல் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் நடந்த இந்த படுகொலை அப் பகுதியில் பேசு பொருளாக மாற்றியுள்ளது. சம்பந்தப்பட்ட கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.