இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க , இந்தியா கடந்த மே 7ம் தேதி இரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை, “ஆபரேஷன் சிந்தூர்” என்ற  ராணுவ நடவடிக்கையை அமல்படுத்தி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சந்தர்பத்தில்  , இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் (LoC) , பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி 16 பேரை கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அதே நேரத்தில், இன்று காலை பாகிஸ்தான், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்கியது.

 இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் (Indian Air Force S-400 Sudarshan Chakra air defence missile systems) வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

மேலும் அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக , இந்தியா தனது நவீன டிரோன்களை பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட் பகுதிகளுக்கு செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது  ஸ்ரீ. இதில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பால் சில டிரோன்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம்  ஊடக பிரிவு, இந்தியா செலுத்திய 25 இஸ்ரேல் தயாரிப்பு ஹெரோப் (Herop) டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. இந்த டிரோன்களின் பாகங்கள் பாகிஸ்தானின் பல இடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, இஸ்ரேலிடம் இருந்து ஹெரோப் மற்றும் காமிகேஸ் (Kamikaze) வகை டிரோன்கள் வாங்கியுள்ளது, இதில் காமிகேஸ் டிரோன்கள் இரண்டு மணி நேரம் பறக்கும் திறன் கொண்டவை. அதேபோல், துருக்கி பாகிஸ்தானுக்கு டிரோன்களை வழங்கியுள்ளது என்றும், இன்று காலை இந்தியா மீது மேற்கொண்ட தாக்குதலில் அவை பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

துப்பாக்கிச்சூடு, ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களின் தொடர்ச்சி, இந்தியா-பாகிஸ்தான் இடையில்  பதற்றத்தை உருவாக்கியுள்ளது.