
முலான்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 31 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் போட்டியின் 31 வது லீக் ஆட்டமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டி நேற்று முலான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, பஞ்சாபின் தொடக்க ஆட்டகாரர்களாக பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
வைபவ் அரோரா, ஹர்சித் ராணா மற்றும் ஆன்ரிச் நோர்க்கியா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் அணியின் பேட்ஸ்பேன்கள் தடுமாறினர், இதனால் ஃபவர் பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆட்டட்த்தின் நடுப்பகுதியிலும் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் தனது சுழல் மாயாஜாலத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை மிரட்டினார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் வரை கூட பஞ்சாப் அணி பேட்ஸ்பேன்கள் தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை போராடி சேர்த்தனர்.
112 என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் முதல் இரண்டு ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தனர். இருப்பினும் கேப்டன் ரஹானே மற்றும் ரகுவன்ஷி கூட்டணி நம்பிக்கை அளித்து, அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர்.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஜொலிக்காதா யுஸ்வேந்திர சஹால் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ரஹானே மற்றும் ரகுவன்ஷி விக்கெட்டை எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார். சஹாலின் சுழலில் மேலும் இரண்டு கேகேஆர் பேட்ஸ்மேன்கள் சிக்கினர். சஹாலுடன் மேக்ஸ்வெல்லும் கைக்கோர்த்து தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார். இருப்பினும் குறைந்த ரன்னே இலக்கு என்பதால் வெற்றி வாய்ப்பு கேகேஆர் அணியின் வசமே இருந்தது, மேலும் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான ஆன்ரே ரஸ்ஸலும் களத்தில் இருந்ததால் கேகேஆர் அணி தான் வெற்றி தான் பெறும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
கேகேஆர் அணி வெற்றி பெற கடைசி 7 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது, ஆனால் கேகேஆர் அணியிடம் 2 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்தலால், போட்டி மிக விறுவிறுப்பாக சென்றது, ரசிகர்கள் அனைவரும் இருக்கையின் நுணியில் அமர வைத்தது. இறுதியில் கேகேஆர் அணியிடம் இருந்த வெற்றி வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டி பறித்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இலக்கை எட்டவிடாமல் சுருட்டிய அணி என்ற சாதனையை பங்சாப் கிங்ஸ் அணி படைத்தது. இதற்கு முன்னர் சிஎஸ்கே அணி 116 என்ற இலக்கை எட்ட விடாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியை சுருட்டியதே சாதனையாக இருந்தது, தற்போது இந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது.