
சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரையில் சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியதாக ராகுல் காந்தி மீது நிர்பேந்திர பாண்டே என்பவர் லக்னோவில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராகும் படி லக்னோ மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடுத்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் , நாட்டின் வரலாற்று பற்றியும் எதுவும் தெரியாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் கருத்து தெரிவிப்பது முறை அல்ல என நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும் இந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், உங்கள் பாட்டியுமான இந்திரா காந்தி சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளது உங்களுக்கு தெரியுமா? மகாத்மா காந்தி கூட ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் (your faithful servant) அதாவது உங்கள் நம்பிக்கைக்குரிய சேவகன் என்று எழுதியுள்ளார் அதாவது உங்களுக்கு தெரியுமா?
மகாத்மா காந்தி இப்படி எழுதியதற்காக ஆங்கிலேயர் வேளையாள் என எடுத்துக் கொள்ள முடியுமா?…
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவர்க்கரை வழிபட்டு வருகின்றனர். உங்களது இது போன்ற கருத்தை அனுமதித்தால் வரும் காலங்களில் நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியையும் தவராக பேச வழிவகுக்கும்.
இந்த ஒரு முறை உங்களுக்கு விலக்கு அளிக்குறோம், அதே வேளையில் இனிமேல் எந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை பேசக்கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. அதையும் மீறி நீங்கள் பேசினால் உச்ச நீதிமன்றம் தாமக முன் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிப்பதாக உத்திரவிட்டனர். இதனை தொடர்ந்து மே 09 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி லக்னோ நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியது
சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் முகராகவும், அவர்களிடமிருந்து ஓய்வுதியம் பெற்றதாகவும் மேலும் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை உட்பட பல இடங்களில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தான் தற்போது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.