மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

Residents of Madurai protest after being supplied with salty water instead of clean drinking water.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்கள் வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர், உப்புத் தண்ணீராக உள்ளதென அவர்கள் குற்றம்சாட்டி அரசுப் பேருந்தை பொதுமக்கள் இடைமறித்து சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“மற்ற பகுதிகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதோடு, எங்களுக்கே மட்டும் உப்புத் தண்ணீர் அனுப்பப்படுவது ஏன்?” என பொதுமக்கள் கேள்வியெழுப்பினர்.

அவர்களின் வலியுறுத்தலால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்த பின்னர், பொதுமக்கள் விலகி சென்றதாக கூறப்படுகின்றது