எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்!

எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்

இந்தியா:- பங்களாதேஷில் லால்மோனிர்ஹாட் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பயன்படுத்திய விமானப்படைத்தளத்தினை (Airbase) வாங்க சீனா முயற்சி செய்கிறது.

மேலும் இந்த ஏர்பேஸானது இந்தியாவின் முக்கியமான சிலிகுரி நடைபாதையிலிருந்து வெறும் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுடன், இந்திய எல்லையிலிருந்து வெறும் 12 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே உள்ள சிறிய எல்லைப் பகுதியே சிலிகுரி ஆகும். இந்த பகுதி “Chicken’s  Neck”  என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த பகுதி 22 கி.மீ அகலம் 60 கி.மீ  நீளம் மட்டுமே கொண்ட சிறிய பகுதியாகும். மேலும் இந்தியா தனது வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ஒரே தரைவழிப்பாதையாக சிலிகுரி எல்லைப்பகுதி உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா மேற்குவங்களாத்தில் ஹசிமார் விமானப்படைத்தளத்தினை (Airbase) உருவாக்கியுள்ளது. இது ரபேலை தாங்கி நிற்கும் அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சீனாவை விட ஒரு படி மேலாகவே அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியாக 1971ல் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த போரில் இந்தியா 93,000  பாகிஸ்தான் இராணுவ வீரர்களை கைது செய்தது.

மேலும் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் பகுதிகளை விடுவிப்பதோடு பங்களாதேஷை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது.

அப்போதிருந்த பாகிஸ்தான் பிரதமர் பங்களாதேஷை தனி நாடாக அங்கீகரிக்க மட்டுமே ஒப்புதல் கொடுத்திருந்தார். காஷ்மீரின் பகுதிகளை சிறிது காலத்திற்கு பின் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்திய பாதுகாப்பு படையினர் அப்போதிருந்த பிரதமர் இந்திராகாந்தியிடம் பங்களாதேஷை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு முன் சிலிகுரி எல்லை பகுதியை விரிவாக்க பங்களாதேஷின் சில மாவட்டங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு அறிவுறுத்தினர்.

1971 போரில் இந்தியாவின் நட்பு நாடான இரஷ்யா பெரிதும் உதவியதோடு பிற நாடுகளின் தலையீட்டையும் தடுத்தது. இதனை பயன்படுத்தியே இந்தியா பங்களாதேஷின் பகுதிகளை இணைத்து சிலிகுரி எல்லைப்பகுதியை விரிவுப்படுத்தியிருக்கலாம் ஆனால் இந்தியாவின் அசாதாரண போக்கினால் இன்று பெரிதும் சிக்கலை சந்தித்து வருகிறது.

எதிர்காலத்தை யோசிக்காமால் இந்தியாவின் இந்த முடிவு இந்தியாவிற்கே இன்று சிக்கலாக உள்ளது. ஒருவேளை  1971ல் கிடைத்த வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் இந்தியா வங்கேதசத்தின்  ரங்பூர் மற்றும் ராஜாசாகி மாவட்டங்களை இந்தியாவுடன் இணைத்து சிலிகுரி எல்லைப்பகுதியை விரிவுப்படுத்தவேண்டும். இதுவே பிற்காலத்தில் எதிரி நாடுகளின் தாக்குதல்களை தடுக்க வழிசெய்யும்.