மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு!

"Private school student dies after collapsing post lunch at school."


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு தனியார் பள்ளியில் நடந்துள்ள மாணவியின் மரணம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பரை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி, பண்ணைக்காடு தனியார் பள்ளியில் பள்ளிப்படிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்

இந்நிலையில், மாணவி பிரியா நேற்று வழங்கம்போல், மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதையடுத்து, திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடனடியாக மாணவியை மீட்ட நிர்வாகம், பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது

அங்கு பரிசோதனை மேற்கொண்ட தலைமை மருத்துவர், மாணவி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தார். இது தொடர்பாக மேலதிக தகவல்களை உறுதி செய்ய, பிரியாவின் உடலை உடற்கூறியல் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவி பிரியாவின் திடீர் மரணம் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவின் தரம் குறித்தும், மாணவியின் உடல்நிலை குறித்து முன் அறிகுறிகள் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.