மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தரைமட்டமான கட்டிடங்கள் !!

Powerful Earthquake in Myanmar - Buildings Flattened

மியான்மரில் இன்று வெள்ளிக்கிழமை காலை இரண்டு சக்திவாய்ந்த  நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது

 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று மதியம் 12:50 மணியளவில்  மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்,  நிலநடுக்கங்களின் மையப்பகுதிகள் அமைந்துள்ளன என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.      
இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் மியான்மரின் அண்டைய  தாய்லாந்தின்  வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் உணரப்பட்டன.

மேலும் இந்த நிலநடுக்கம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள் பார்போரை பதற வைத்துள்ளது

கட்டிடங்கள் அதிர்வதும், மக்கள் பயத்துடன்  தெருக்களில்  ஓடுவதையும்   வீடியோக்களில் காணமுடிகிறது

மேலும் கட்டிடமொன்று அடியோடு சரிந்து விழுகும்  வீடியோ வெளியாகி நிலநடுக்க்தி்ன் தீவிரத்தை எடுத்துகாட்டியுள்ளது

தற்போதைய நிலவரப்படி, உயிரிழப்புகள் அல்லது உடைமைகளின் சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை . எனினும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது