₹5 கோடி மோசடி புகாரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

"Power Star Srinivasan arrested in connection with ₹5 crore fraud complaint."


தமிழ் திரைப்படங்களில் காமெடியில் தனி முத்திரை பதித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான மோசடி புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபரிடம், ரூ.1000 கோடி அளவுக்கு கடன் வசதி பெற்றுத் தருவதாக கூறி, அவர் ரூ.5 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு எதிராக 2018ம் ஆண்டிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டும் முறையாக பதிலளிக்காததால், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னையிலும் ஆறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது திரையுலகிலும், அவரது ரசிகர்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.