
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல புகார்கள் கிடைத்தன. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் ஜோஸ்வா என்ற நபர் செல்போன் திருட்டில் ஈடுபடுவது போலீசாருக்கு தெரிந்ததும், அவரை பிடிக்க திட்டமிட்டு கண்காணித்து வந்த போது போலீசாரை பார்த்ததும் ஜோஸ்வா தப்பிச் செல்ல முயன்றுள்ளார்
உடனே பதுங்கி இருந்த தனிப்படை போலீசார் விரைந்து ஓடி சென்று துரத்தி பிடித்து அவரை கைது செய்தனர். ரயில் நிலையத்தில் நடந்த இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விசாரணையில், ரயில் நிலையத்துக்கு வந்து பயணிகளிடம் சவாரி கேட்பது போல நடித்து, அவர்கள் அசந்த நேரத்தில் செல்போன்களை பறிப்பதை ஜோஸ்வா வாடிக்கையாக செய்துவந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.