
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.258 கோடி என ஒன்றிய அரசு நாடுளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க சென்றதற்கான செலவு மட்டும் ரூ.22.89 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, பிரதமர் மோடி கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார்.
இந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு ரூ.258 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா சென்றதற்கான செலவு மட்டும் 22.89 கோடி என கூறப்பட்டுள்ளது,
கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது 15.33 கோடி, 2023ல் ஜப்பான் பயணத்திற்கு ரூ.17.19 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தங்குமிட செலவிற்காக மட்டும் 103 கோடி, மற்றும் பயணத்திற்கு 71 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமெரிக்கா முன்னாள் அதிபர் பைடன் மனைவிக்கு வழக்கப்பட்ட வைர பரிசு 17.15 லட்சம் ஆகும்.