பயிற்சி மருத்துவர்கள் விடுதியில் மோதிய விமானம் – பதைபதைக்கும் காட்சிகள்!

Scene of a plane crash into a trainee doctors’ hostel with intense and shocking visuals.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நகரில் உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விழுந்து  நொறுங்கியது. இ

ந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமான ஊழியர்களுடன், மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர்.

விமானம் நேரடியாக மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தங்கிய விடுதியில் மோதியது. மதிய நேரத்தில் அந்த விடுதியில் பலர் உணவிற்கு கூடியிருந்தபோது விபத்து ஏற்பட்டதால், பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதில் மூன்று கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. தீவிர தீப்பற்றல் ஏற்பட்ட நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. விடுதி முழுவதும் புகை மூடிய நிலையில், படுகாயமடைந்தவர்கள் பல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பயிற்சி மருத்துவர்களின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவத்தின் பயங்கரத்தன்மையை காட்டும் வீடியோக்கள் மற்றும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது