வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பெயிண்டர் கைது

Police arrest painter for cultivating cannabis plants on rooftop terrace.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெயிண்டர் சுபாஷ் கிருஷ்ணனை விசாரித்தனர். சோதனையில், அவர் வசம் 50 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் சுபாஷ் கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டு மாடியில் பூஞ்செடிகளுக்கிடையில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது.

கஞ்சா மற்றும் செடிகளை பறிமுதல் செய்த போலீசார், சுபாஷ் கிருஷ்ணனை கைது செய்து, அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.