பஹல்காம் எதிரொலி: விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்

பஹல்காம் எதிரொலி விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.

அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து பல்வேறு பாகிஸ்தான் பிரபல யூடியுப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டிருந்த நிலையில் ,

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம் , ஷஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, மற்றும் ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட பலரின் இன்ஸ்டா கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.