
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில், கழிப்பறையை சுத்தம் செய்ய எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வளாகமும் கழிப்பறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பெயரில் மாணவ-மாணவிகளைவே கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பள்ளியில் குழந்தைகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவத் தொடங்கியுள்ளன. குழந்தைகளின் மனிதாபிமானம், உரிமை, பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகள் போன்றவை மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளன.
இந்த புகைப்படங்கள் பெரிய அளவில் பரவியதால், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கல்வித்துறையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது பற்றி எதிர்பார்ப்பு நிலவுகிறது.