
சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அறிக்கையில் அவர் கூறியதாவது:
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.
பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் “SIR”-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்?
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
என தெரிவித்துள்ளார்