பெண் காவலரை தாக்கிய நைஜீரிய கைதி – புழல் சிறையில் பரபரப்பு!

Nigerian prisoner attacks female police officer inside Puzhal Central Prison causing chaos.

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் கடந்த சில மாதங்களாக சென்னை புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியே வர அனுமதி கேட்டு சிறை காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மோனிகா பெண் காவலர் சரஸ்வதி மீது முகத்தில் தாக்கியுள்ளார். இதனால் அவர் காயமடைந்து உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து சிறை நிர்வாகம் தகவலறிந்ததும், புழல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் மோனிகா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி மோனிகா முன்பும் காவலர்களுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.