
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை (26) திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு தென்னரசன் அடிக்கடி மதுவில் டோந்து வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி மதுபோதையில் வீடு திரும்பிய தென்னரசனை லாவண்யா கண்டித்ததால் ஆத்திரம் கொண்ட அவர் வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியைக் கொண்டு லாவண்யாவை சுட்டார். அதை தடுக்க முயன்ற அவரது தாயார் பச்சையம்மாளையும் சுட்டார்.
சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த உறவினரும் வக்கீலுமான கார்த்திக் (28) வந்து சமாதானம் செய்ய முயன்றபோது அவரையும் தென்னரசன் துப்பாக்கியால் சுட்டார். இதில் கார்த்திக் உடனே உயிரிழந்தார். லாவண்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நேற்று உயிரிழந்தார். பச்சையம்மாள் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார்.
காவல்துறையினர் தென்னரசனை கைது செய்து இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.