சுற்றுலா வாகனங்களுக்கு நாளை முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு !!

சுற்றுலா வாகனங்களுக்கு நாளை முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு

நீலகிரி மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

அந்த அறிவிப்பின் படி , திங்கள் முதல் வெள்ளி வரை நாளொன்றுக்கு 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது 

அதன் அடிப்படையில், தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது .

இந்நிலையில், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் மாத இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி 6,000 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 8,000 வாகனங்களும் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுமென தெரிவித்துள்ளது

இந்த கட்டுப்பாடு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளதுடன் ஐகோர்ட் உத்தரவின்படி, முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  

இதற்காக, நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் 12 சோதனை சாவடிகள்  தீவிர  சோதனை நடைமுறைபடுத்தபடவுள்ளது

கல்லாறு, குஞ்சபனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 12 இடங்களில் சுற்றுலா வாகனங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில், நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ், அவசரகால வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.