
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி, குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மனமுடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது குழந்தையை கொன்று விட்டு அமராவதி தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறு எவ்வளவு காரணமென விசாரணை செய்து வருகின்றனர்.