
“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.”
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பெரும் திரளான மக்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. விஜய் உரையாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெண் மயக்கம் அடைந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விஜய் பேச்சை முடித்து புறப்பட்ட பிறகு கூட்டம் கலைந்து செல்லும் வேளையில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் வந்த தகவலின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது