
கோயம்புத்தூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் தடுப்பணை அருகே நேற்று முன்தினம் இரவு மூவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது 35), “நமக்கும் ஒரு பாட்டில் ஊற்றித் தரீங்க” என மிரட்டி கேட்டுள்ளார்.
இதற்க்கு கடுப்பான அந்த மூவர், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், மூவரும் சேர்ந்து சுரேஷை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதற்குப் பிறகு அருகிலிருந்த குழியொன்றில் உடலை தள்ளி, தீவைத்து எரித்து புதைத்துள்ளனர்
மேலும் சுரேஷின் இருசக்கர வாகனத்தை தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் பாண்டி என்பவர் தான் செய்த குற்றத்திற்கு போலீசில் சரணடைந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், கரண் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.