ரூ.200 கடனுக்காக கொலை – சேலத்தில்  அதிர்ச்சி சம்பவம்!

A shocking murder over a ₹200 loan reported in Salem, highlighting the grim reality of violence over minor disputes.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற லாலா (வயது 32), பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவராக கருதப்படுகிறார். 

அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் மதுரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்

இந்த நிலையில், . சுப்பிரமணி, கை, கால்கள் கட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்த அக்கம்பக்க மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்

முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணி அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணனிடம் ரூ.200 கடன் கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது. போதையில் இருந்த சுப்பிரமணி, கடன் தொகையை திருப்பிக் கேட்க முயன்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு  சுப்பிரமணி, கமலக்கண்ணனை தாக்க முயன்றதோடு, அவருடைய தங்கை மற்றும் தாயையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் (32), அவரது சகோதரர் கார்த்திக் (28), உறவினர்கள் அருண்பாண்டியன் (26), அலெக்ஸ் பாண்டியன் (23), பெரியசாமி (26) ஆகியோர் இணைந்து சுப்பிரமணியை மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன் போது, கமலக்கண்ணன் தனது வீட்டில் இருந்த கத்தியால் சுப்பிரமணியை குத்தியதால், அவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில்  போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.