ரூ.38,000 ஏ.சி பழுதுக்கு ரூ.1.50 லட்சம் செலவு  கணக்கு காட்டிய நகராட்சி தலைவர்!

"Municipality chairman accused of inflating AC repair cost from ₹38,000 to ₹1.5 lakh"

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அண்மையில் நடந்த நிதி முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விக்கிரமசிங்கபுர நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்தவர்  ரூ.38,000 மதிப்புள்ள ஏ.சியை பழுது நீக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானதாக கணக்கில் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூவர் மற்றும் தி.மு.க கட்சியை சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் ஒருவரும் நகராட்சித் தலைவர் ஆட்சிக்கு எதிர்த்து  கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நான்கு பேரும் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு தலைவருக்கு எதிராக முழக்கமிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் நான்கு பேரையும் கைது செய்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.