புதுப்பாளையத்தில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

Image representing a tragic suicide case of a mother and son who consumed poison in Pudhupalayam.

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தில் பருவதம்மாள் என்ற பெண் தனது மகன் சபரிவாசனுடன் வீட்டை பூட்டிக்கொண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பருவதம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் பட்டம் பெற்ற சபரிவாசன் தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில் தங்களது உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், புதுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.