வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை

"Body of missing schoolgirl recovered after she vanished from home."

பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து மாயமானார். தொடர்ந்து நடத்திய தேடலில் அந்த மாணவி வீட்டருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். பெற்றோரின் கண்டிப்பினால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவி மர்ம நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.