சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

"Three individuals arrested in Chennai for attempting to smuggle methamphetamine in a major drug bust."

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு முறனாக பதிலளித்ததால் சந்தேகம் அதிகமாகி, உடனடியாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சூர்யபாரதி (28), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் (35), செம்மஞ்சேரி ராம்குமார் (40) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இந்த போதைப் பொருளை எங்கே கொண்டு சென்றார்கள்? யாருக்கு விற்பனை செய்ய இருந்தனர்? என்பதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.