
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் இயங்கிவரும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று காலை பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
காலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ரசாயனங்களை கலக்கும் போது ஏற்பட்ட கோளாறால் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது
20 அறைகள் கொண்ட ஆலையில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக கூறப்படுகின்றது
இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மீதமுள்ள 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆலையின் ஃபோர்மேன் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலையின் உரிமம், பாதுகாப்பு கட்டுப்பாடுகள், அனுமதியில்லா ரசாயன கலவை, ஊழியர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.