
நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது ரவிக்குமார் என்ற நபர் அவளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வன்கொடுமையால் சிறுமி கர்ப்பமாகியதும், அவளது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு நீலகிரி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி, ரவிக்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்துள்ளார். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.