
வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் ரகசியமாக சேகரித்த தகவலின் அடிப்படையில் லென்ஜாங்கத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், இவருடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.