கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

A man tragically died after accidentally falling into a well while sitting on its edge and eating chicken rice

கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

அவரை அக்கம் பக்கத்தினர் வந்து மீட்கும் போது அவர் உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது. உடனடியாக தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டுவிற்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவு குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.