
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர் வாங்க வந்த வீரமணி என்ற நபர், பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாகக் கேட்டதாகக் கூறி கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் தீவிரமாகி, ஆத்திரமடைந்த அவர், கடை மீது காலி பீர் பாட்டில்களை வீசி ரகலையில் ஈடுப்பட்டுள்ளார்
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரமணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.