சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

"Man arrested in Chennai's Manali for abducting a 5-year-old girl."

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவல் பெற்ற போலீசார் சிறுமியை தீவிரமாக தேடினர். அப்போது மணலி புதுநகரைச் சேர்ந்த முரளி என்ற நபர் சிறுமியை கடத்தி தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் முரளியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் வீட்டை சோதனை செய்த போலீசார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்திய முரளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.