
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் நெல்லையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.
இந்த மாநாட்டில் பாஜக தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக ஆக்குவது பாஜகவின் கடமை. அவரை ஆட்சியில் அமர வைப்பது நமக்கு உள்ள பொறுப்பு. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது” என்று கூறினார்.