
திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஜூலை 20ஆம் தேதி காலை சொகுசு காரில் விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (44) தனது குடும்பத்துடன் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் அருகே சென்ற போது காரின் டயர் திடீரென வெடித்ததால் நிலை தடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது
அதிவேகத்தில் சென்ற காரில் சீட் பெல்ட் அணியாதது காரணமாக பாதிப்பு அதிகமாக இருந்ததுள்ளது. இதில் மாதவனின் குடும்பத்தினர் சங்கீதா (38), சுபா (55), தனலட்சுமி (70), ராகவேந்திரன் (20) ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வாகனத்தை மீட்டு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.