
விடுதி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்து அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி, தீ வைத்து எரித்த சம்பவமொன்று கொடைக்கானலில் பதிவாகியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி அருகே, குருசடி மெத்து பகுதியில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் , சிவராஜ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த கொடூர சம்பவம் அண்மையில் மதுரையில் உள்ள, ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த மணிகண்டன் என்ற இளைஞரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
மணிகண்டன், விடுதி உரிமையாளரை கொலை செய்து, உடலை எரித்ததாக விட்டதாக மறுவாழ்வு மைய அதிகாரிகளிடம் சொல்லியுள்ளார்.
இதனை அவர்கள் மதுரை போலீசாரிடம் தெரிவித்ததும், சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து, கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் , விடுதி உரிமையாளர் சிவராஜ் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தது தெரியவந்ததுள்ளது
இதையடுத்து, போலீசார் நேற்று விடுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனைக்குப் பிறகு, விடுதியின் ஒரு அறையில் இரத்தக் கறைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்
மேலும், விடுதிக்கு வெளியே கேம்ப் பயர் அமைக்கப்பட்ட பகுதியில் , எரிந்த எலும்புத் துண்டுகள் இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்
அதுமட்டுமின்றி, விடுதி அருகே உள்ள புதர்பகுதியில் சிவராஜின் தலை மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது
இந்த கொடூர சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.