
தன்பாலின ஈர்பாளர்கள் திருமணம் இல்லாமல் கூட குடும்பமாக வாழலாம் எனவும் திருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தை உருவாக்கும் வழிமுறையாக இருக்க முடியாது எனவும் மதுரை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது.
25 வயது பெண் ஒருவர் தான் விரும்பிய பென்னுடன் வாழ விரும்பிய நிலையில் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
அதற்கெதிராக அவர் தொடர்ந்த வழக்கில் , நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது
அதாவது அந்த தீர்ப்பில், “தனிப்பாலின ஈர்ப்பு கொண்டோர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும், அவர்கள் குடும்பமாக வாழ முடியும் என்பது உண்மை. திருமணத்தைத் தாண்டியும் குடும்ப உறவுகள் அமையக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு , நவீன சமூகத்தில் வேறுபட்ட விருப்பங்களை மதிக்க வேண்டிய அவசியத்தையும் , மனித உரிமைகளுக்கு அடித்தளமாக இருப்பது தனிநபரின் விருப்பங்களை மதிப்பது என்ற எண்ணத்தையும், நீதிமன்றம் சட்டரீதியாக உறுதி செய்துள்ளது என பலரும் கூறிவருகின்றனர்