ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

"Young woman sexually assaulted after attending liquor party with male friends"

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, விடுதியில் தங்கி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அதே விடுதியில் இருந்த 27 வயது பெண்ணுடன் நெருங்கிய நட்பு வளர்த்துக் கொண்ட அவர், கடந்த வாரம் மது விருந்துக்காக லாட்ஜில் அறை எடுத்து, தோழியின் 2 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் தூங்கிய பெண் , அடுத்த நாள் காலை விழித்த போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணர்ந்த இளம்பெண், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், அந்த பெண் தோழி மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த ஆண் நண்பர் மனாசே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோழிகளுடன் சேர்ந்து எல்லை மீறி மது விருந்துகளில் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்