காலை நேரத்தில் டாஸ்மாக் முன்பு மது அருந்தியவர்களை விரட்டிய போலீஸாருடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்

"TASMAC customers arguing with police officers after being chased away for drinking in front of the liquor shop during early morning hours."

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு காலை நேரத்திலும் மதுபிரியர்கள் திரண்டிருந்தனர்.

வீதியோரம் மற்றும் பார் முன்பு மது பிரியர்களின் கூட்டத்தை கண்டு அப்பகுதியில் காவல் பணியில் இருந்த கேளம்பாக்கம் காவல்நிலைய போலீஸ் அதிகாரி அங்கு வந்து இங்கு குடிக்கக்கூடாது எனக் கூறி விரட்ட முயன்றார்.

இதனால் கோபமடைந்த சிலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, லேசான கைகலப்பிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் கேளம்பாக்கம் காவல்நிலைய காவலரின் பின்னால் சென்ற ஒருவர் என்னை வீடியோ எடுங்கள் என்று கிண்டல் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, முறைகேடாக நடந்துகொண்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.