
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக நிறுவனர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி மாற்றத்துக்கான நம்பிக்கையை விதைத்த தலைவர் விஜயகாந்த் எd எக்ஸ் தளத்தில் புகழாரம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில், “திரையுலகிலும் அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றத்தக்கவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி இன்னும் தேமுதிக அலுவலகத்தில் தொடர்வது பாராட்டத்தக்கது.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்” என அண்ணாமலை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.