
கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இது திட்டமிட்ட சதியால் நடந்தது எனக் கூறியுள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில்தான் நாங்கள் கூட்டம் நடத்தியோம். அதற்குப் புறம்பாக எவ்விதத் தவறும் எங்கள் தரப்பில் நடைபெறவில்லை. ஆனாலும் எங்கள் நிர்வாகிகள், தோழர்கள், சமூக வலைதளங்களில் செயல்படும் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
CM சார், பழிவாங்க வேண்டுமெனில் என்னிடம் பழிவாங்குங்கள். நான் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருப்பேன். என்னை எப்படியும் நடத்துங்கள். ஆனால் எங்கள் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மீது கை வைக்க வேண்டாம்.
நண்பர்களே, தோழர்களே, நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியமாகவும் தொடரும்.”
இவ்வாறு விஜய் தனது வீடியோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.