தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சகோதரிகள் மீது பாலியல் வன்கொடுமை – கராத்தே மாஸ்டர் கைது

"Karate instructor arrested for alleged sexual harassment of sisters during self-defense class."


கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஒரு தனியார் கராத்தே பள்ளியில், ஜெயின் மிலாடு என்ற பயிற்சியாளர் தற்காப்பு கலை பயிற்சி வழங்கி வந்தார்.

சனிக்கிழமையன்று, “குட் டச், பேட் டச்” சொல்லித்தருவதாக கூறி, அந்த பள்ளியில் பயிலும் இரண்டு சகோதரிகளை ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குளச்சல் மகளிர் போலீசார் விரைவான விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதால், ஜெயின் மிலாடு மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் உள்ளூர் பகுதியில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.