
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில், புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். இவர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
தி.மு.க சார்பில் பி. வில்சன், எழுத்தாளர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் பதவியேற்றனர். இவர்களுடன் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவை உறுப்பினராக தனது பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்வில் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன், “கமல்ஹாசன் எனும் நான்!” என அவரது பதவியேற்பு உரையை சபையில் வாசித்த பின்னர் பதவியேற்றுக்கொண்டார்
புதிய எம்பிக்கள் மூலமாக மாநில உரிமைகள், தமிழரின் உரிமைகள் குறித்து மாநிலங்களவில் வலியுருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.