சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் ரவுடியிசம்.. மீண்டும் கைது செய்து போலீசார் விசாரணை!

"Repeat offender arrested again for rowdy activities just days after being released from prison."

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினித்குமார், முன்பு ரவுடியிசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் கடைக்காரர்களை மிரட்டுவது, வழிப்போக்கர்களுடன் தகராறு செய்வது உள்ளிட்ட அட்டூழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒருமுறை அழைத்து எச்சரித்தும் பயனில்லாமல் மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததால், கூடுவாஞ்சேரி போலீசார் வினித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.