YouTube-ல் கற்றுக்கொண்ட நகைக்கடை கொள்ளை – இருவர் போலீசாரால் கைது!

Two individuals arrested by police for executing a jewellery shop robbery inspired by YouTube videos.


சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள நகைக்கடையில், நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல சென்ற மூர்த்தி மற்றும் சாமிதுரை என்ற நபர்கள் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் மீது YouTube பார்த்து தயாரித்த ஆபத்தான ரசாயன கலவையை ஊற்றியுள்ளனர்

பின்னர், 80 சவரன் தங்க நகைகளை திருடி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் மூர்த்தியை மடக்கிப் பிடித்துள்ளார். அதே சமயம், அக்கம் பக்கத்தினர் சாமிதுரையை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய ரிவால்வர் வகை துப்பாக்கியை சாமிதுரை தான் கையால் தயாரித்தாரா என்பதைப் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.